#BREAKING: பிரதமர் மோடி பேச்சை புதின் கேட்பார் – உக்ரைன் தூதர்..!
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த அதிபர் புதினுடன் பேசுமாறு இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் கோரிக்கை.
போரை நிறுத்த இந்திய பிரதமர் தலையிடுவதற்காக காத்திருப்பதாக உக்ரைன் தூதர் இகோர் போலிக்கா கோரிக்கை விடுத்துள்ளார். அதில், ரஷ்ய அதிபர் புதின் யாருடைய பேச்சை கேட்பார் என்று தெரியவில்லை. ஆனால் இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடனும் பேச முடியும், உக்ரைன் அதிபருடனும் பேச முடியும்.
வரலாற்றில் பலமுறை அமைதியை ஏற்படுத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலை தடுத்து நிறுத்தவும், இந்தியா வலுவாக குரல் கொடுக்கவும் உக்ரைன் தூதர் தெரிவித்தார். பிரதமர் மோடி உலகளவில் மதிப்புமிக்க தலைவர் என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என நம்புகிறேன். உக்ரைனுக்கு ஆதரவு அளிக்குமாறு இந்தியாவை கேட்டுக்கொள்வதாகவும் உக்ரைன் தூதர் இகோர் போலிக்கா கூறினார்.
உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 10 பேர் உயிரிழந்தனர். இராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. ரஷியா உடனான தூதரக உறவுகளை உக்ரைன் முறித்துக்கொண்டது.