பிரதமர் மோடி மான் கி பாத் என்பதற்கு பதிலாக பெட்ரோல் கி பாத் அல்லது டீசல் கி பாத் என வைத்திருக்கலாம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கூறியுள்ளார்.
நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பேசினார். அப்போது பேசிய அவர் மத்திய அமைச்சரவையிலிருந்து பாபுல் சுப்ரியோ அவர்கள் நீக்கப்பட்டுள்ள நிகழ்வு மூலம் வருகிற 2024 ஆம் ஆண்டில் நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்க முடியாது என்பதை பாஜக உணர்ந்து கொண்டது என்பதை உணர்த்துவதாக கூறியுள்ளார். மேலும் பிரதமருக்கு நான் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். இருப்பினும் அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
நாடு முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், தினமும் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு அமைதியாக இருந்து வருகிறது. ஆனால், பிரதமர் மான் கி பாத் (மனதின் குரல் ) நடத்துவதில் மட்டுமே மும்முரமாக இருப்பதாகவும், அதற்கு பதிலாக அவர் பெட்ரோல் கி பாத், டீசல் கி பாத் என வைத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார். மேலும் மத்திய அமைச்சரவை குறித்து நான் எந்த கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…
சென்னை : தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க பேருதவி புரியும் சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14இல்…
மாஸ்கோ : அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மேற்பட்ட மாகாணங்களில் வெற்றி பெற்று…