உத்தரகாண்டின் முதல்வராகிறார் புஷ்கர் சிங் தாமி…!
உத்தரகாண்டின் முதல்வராகிறார் புஷ்கர் சிங் தாமி தேர்வு.
கடந்த 2017-ல் உத்தரகாண்ட் மாநிலத்தில், சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, திரிவேந்திர சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார். இவர் கடந்த மார்ச் மாதம் மேலிடத்தின் உத்தரவை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் தீரத் சிங் ராவத் அவர்கள் முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், தீரத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்ற போது, நாடாளுமன்ற எம்பியாக மட்டும் இருந்த காரணத்தால் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் உத்தரகாண்ட் மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நிலை அவருக்கு இருந்தது.
அப்படி தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே பதவியை தொடர முடியும் என்ற நிலை இருந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் இடைத் தேர்தலை நடத்துவது மிகவும் சவாலான காரியம் என்பதால், தானே முன்வந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். இவர் முதல்வர் பதவியை ஏற்று 4 மாதத்திலேயே, பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டேராடூனில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கதிமா தொகுதி எம்.எல்.ஏ-வான புஷ்கர் சிங் தாமி (45) முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.