#Breaking:உத்தரகாண்டின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் பதவியேற்பு…!

Default Image

உத்தரகாண்டின் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி தற்போது பதவியேற்றுக் கொண்டார்.

உத்தரகாண்டின் முதல்வராக பதவியேற்ற பாஜகவை சேர்ந்த தீரத்சிங்ராவத் அவர்கள்,6 மாதங்களில் எம்எல்ஏவாக தேர்வாக முடியாத நிலை ஏற்பட்டதால் ,எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டின.இதனால்,அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

பின்னர் டெல்லியில் உள்ள கட்சி தலைமையிடம் தீரத் சிங் ஆலோசனை மேற்கொண்ட பிறகு,ஆளுநர் பேபி ராணியிடம் தனது பதவி விலகலுக்கான கடிதத்தை கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து,டேராடூனில் நடந்த கட்சி கூட்டத்தில் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில்,முதல்வருக்கான பதவியேற்பு விழாவானது தற்போது நடைபெற்று வருகிறது.அதன்படி,உத்தரகாண்டின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி தற்போது பதவியேற்றுள்ளார்.அம்மாநில ஆளுநர் பேபி ராணி பதவி பிரமாணத்தை செய்து வைத்தார்.

கொரோனா காரணமாக இந்த பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் குறைந்த நபர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்