யெஸ் வங்கியில் சிக்கிய பூரி ஜெகநாதர் கோவிலின் ரூ.545 கோடி… கவலையில் பக்தர்கள்…
யெஸ் வங்கி வாராக்கடன் பிரச்சனையால் நிதி நெருக்கடி சிக்கி ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுக்க கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த யெஸ் வங்கியில்தான் புகழ்பெற்ற ஒடிசா மாநிலத்தின் பூரி ஜெகநாதர் கோவிலுக்கு காணிக்கை மூலமாக வந்த ரூ.545 கோடி பணத்தை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கோவில் நிர்வாகம் 2 வைப்பு நிதியாக பிரித்து மொத்தம் 545 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது.
இந்த வைப்பு நிதிகளில் ஒன்று மார்ச் 16-ம் தேதியும், மற்றொன்று மார்ச் 29-ம் தேதி முதிர்வு அடைகிறது. ஆனால் தற்போது யெஸ் வங்கி நிதி நெருக்கடியில் சிக்கி ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருப்பதால் 545 கோடி ரூபாய் எப்படி எடுக்க முடியும் என பக்தர்கள் கவலையில் உள்ளனர்.