விவசாயிகளிடம் கொள்முதல் செய்து 3 நாட்களில் பணம் கொடுக்க வேண்டும் – உ.பி முதல்வர் உத்தரவு!

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று முதல் ரவி பயிர் கொள்ளும் முதல் தொடங்கும் நிலையில், இது குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்துள்ளார்.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பணத்தை கொள்முதல் செய்து 72 மணி நேரத்திற்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாயிகளுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாத வகையில் அந்தந்த மாவட்டங்களில் கோதுமை கொள்முதல் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயிர்களை சரியான நேரத்தில் எடுத்து செல்ல வேண்டும் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முறையாக செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு சிறந்த விலையை பெற உதவும் வகையில் புதிய தொழில்நுட்ப சாதனங்களையும் உத்தரப் பிரதேச மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.