பப்ஜி விளையாட்டு மூளையை பாதிக்கும்!!! பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை!!
பப்ஜி(PUBG) போன்ற விளையாட்டுகள் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் என்று டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் மட்டும் அல்லாமல் இந்தியாவும் தற்போது ஸ்மார்ட் போன் என்ற சிறிய உலகத்தில் பயணித்து வருகிறது.2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் அறிமுகமான பப்ஜி(PUBG -playerUnknown’s Battlegrounds, popularly) விளையாட்டு இளைஞர்கள், குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரின் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த விளையாட்டை இந்தியா முழுவதும் தடை செய்ய வலியுறுத்தி பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.இதன்விளைவாக பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிராவில் பப்ஜி விளையாட்டை தடை செய்யக்கோரி, அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு 11 வயது அகாத் என்ற சிறுவன் கடிதம் எழுதினான் .அதில் இந்த விளையாட்டை உடனடியாக நம் நாட்டில் தடை செய்ய வேண்டும். வன்முறை, கொலை என குழந்தைகளுக்கு பொருத்தமில்லாத தவறான பல அம்சங்கள் இருப்பதாக தெரிவித்தான்.
இந்நிலையில் டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பப்ஜி குறித்து அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது.அதில் பப்ஜி(PUBG) போன்ற விளையாட்டுகள் குழந்தைகளின் மூளையை பாதிக்கும்.அதேபோல் போர்நைட் (fornite), கிராண்ட் தேப்ட் ஆட்டோ (grand thef auto),காட் ஆப் வார் (god of war),ஹிட்மன் (hitman),போகிமன் (pokeman )விளையாட்டுகளும் குழந்தைகளை பாதிக்கும் என்று டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது.