லஞ்சம் வாங்கிய வங்கி அதிகாரிகள் ???
நீரவ் மோடிக்கு விதிமுறைகளை மீறி கடன் பெற உத்தரவாதக் கடிதம் வழங்குவதற்காக தங்கம், வைரம் மற்றும் பல பொருட்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் லஞ்சமாக பெற்றதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழிலதிபர் நீரவ் மோடிக்கு 12,700 கோடி ரூபாய் கடன் அளித்தது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் உட்பட 14 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
இந்நிலையில் விதிகளை மீறி நீரவ் மோடிக்கு கடன் உத்தரவாத கடிதம் அளிப்பதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை அதிகாரி யஷ்வந்த் ஜோஷி, 60 கிராம் எடைகொண்ட இரண்டு தங்கக் காசுகளையும், வைர காதணி ஒன்றையும் பல பொருட்களையும் லஞ்சமாக பெற்றுள்ளதாக சிபிஐ போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
லஞ்சமாகப் பெறப்பட்ட தங்க, வைர நகைகளை வங்கி அதிகாரியின் வீட்டில் இருந்து கைப்பற்றியுள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு