பணமோசடி வழக்கில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னியின் மருமகனை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங் பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் (ED) கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங் ஹானி என்பவருடன் வியாபாரத் தொடர்புடைய குத்ராதீப் சிங் என்பவரிடம் அமலாக்கத் துறையினர் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, பூபிந்தர் சிங்குக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பூபிந்தர் சிங்குக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.8 கோடியும், பூபிந்தரின் நண்பரான சந்தீப்பிடம் இருந்து ரூ.2 கோடியும், ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களும், ரூ.12 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்சும் கைப்பற்றப்பட்டது.
சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்த பூபிந்தர் சிங் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி நேற்று விசாரணை நடைபெற்றது. சுமார் 9 மணி நேரம் நீடித்த விசாரணையில், பூபிந்தர் சிங் தனது உடல்நிலை சரியில்லை என அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதையடுத்து பூபிந்தர் சிங் ஜலந்தரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிற்பகல் 1 மணியளவில், பூபிந்தரின் உடல்நிலை இயல்பாக உள்ளதாக மருத்துவமனை கூறியது. இதையடுத்து மாலை பூபிந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…