தன் செல்போன் பறித்தவனை துரத்தி பிடித்து பொதுமக்களிடம் ஒப்படைத்த 15 வயது சிறுமி.!
தன்னிடம் செல்போன் பறித்தவனிடம் போராடி, தன் செல்போனை மீட்டது மட்டுமல்லாமல், அந்த திருடனை பொதுமக்களிடம் பிடித்துக்கொடுத்துள்ளார் பஞ்சாபை சேர்ந்த 15 வயது சிறுமி.
கடந்த ஞாயிற்று கிழமை பஞ்சாப் மாநிலம் ஜலாந்தர் நகரில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி தனது வீட்டிற்கு பிரதான தெருவில் நடந்து சென்றுள்ளாள். அச்சமயம், அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த சிறுமியிடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால், அந்த சிறுமி தனது போனை விட்டுக்கொடுக்காமல், செல்போன் பறித்தவனிடம் போராடுகிறாள். உடனே அந்த செல்போன் திருடன் அருகில் இருந்த ஆயுதத்தை கொண்டு சிறுமியை தாக்க முயற்சிக்கிறான். இதனையெல்லாம் பார்த்த அத்தெருவினர் ஓடி வந்து செல்போன் பறித்தவனை பிடிக்கின்றனர்.
உடனே, பைக்கில் இருந்த இன்னொரு திருடன் பைக்கை விரட்டி சென்றுவிட்டான். பின் சீட்டில் இருந்து செல்போன் பறித்தவன் மட்டும் பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டான்.
தனது செல்போனை பறித்தவனை விடாமல் துரத்தி சென்று, விரட்டி பிடித்த அந்த சிறுமியின் செயல் அருகில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#Punjab: 15-year-old girl fights snatchers to save her mobile phone in #Jalandhar pic.twitter.com/MTqYvwiXPr
— The Tribune (@thetribunechd) September 1, 2020