பஞ்சாபில் நேற்று வரையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 86 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளசாராயத்தை அருந்தி கடந்த புதன் கிழமை முதல் ஏரளாமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று வரையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 86 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டார்னில் 63 பேர், அமிர்தசரஸில் 12 பேர் மற்றும் குர்தாஸ்பூரில் (படாலா) 11 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ், படாலா, டர்ன் ஆகிய 3 மாவட்டங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சுமார் 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரையில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளாமான சாராய பேரல்கள், கள்ளச்சாராய கேன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக்க ஏழு கலால் அதிகாரிகள், ஆறு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இறந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார்.
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…