உயிரிழந்த விவசாயிக்கு ரூ.1 கோடி நிவாரணம்.. அரசு வேலை.! பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு.!
வேளாண் விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை நிர்ணயம் செய்யும்படி நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்பது உளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியை நோக்கி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
போராடும் விவசாயிகள் டெல்லிக்குள் வருவதை தடுக்க பஞ்சாப், ஹரியானா எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் தடுப்புகளை அமைத்து, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் விவசாயிகளை தடுத்து வருகின்றனர். இதனால் , எல்லை பகுதிகளில் பெரும் பதற்ற நிலை நிலவிவருகிறது.
ReadMore – விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த 22 வயது விவசாயி..! இறப்பதற்கு முன் பேசிய உருக்கமான வார்த்தைகள்
கடந்த புதன்கிழமை அன்று பஞ்சாப் மாநில எல்லை கானௌரி பகுதியில், பதிண்டாவை சேர்ந்த 21 வயது இளம் விவசாயி சுப்கரன் சிங் என்பவர் பாதுகாப்பு படையினர் சுட்ட ரப்பர் குண்டு காயம் பட்டு உயிரிழந்தார் என கூறப்படுகிறது. இன்னும் பிரேத பரிசோதனை விவரங்கள் வெளியாகாத காரணத்தால் இறப்புக்கான முழுதான காரணம் தெரியவில்லை.
விவசாயிகள் போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சிகள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த 21 வயது இளம் விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாவும், சுப்கரன் சிங் தங்கைக்கு அரசு வேலை தருவதாகவும் பஞ்சாப் புதல்வர் பகவந்த்சிங் மான் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.