ஹாக்கி வெண்கலம் – ரூ.1 கோடி பரிசு அறிவித்த பஞ்சாப் அரசு..!
இந்திய ஹாக்கி அணியில் உள்ள பஞ்சாப்பை சேர்ந்த 8 வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி, இன்று வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விகையாடியது. இதில், ஜெர்மனி அணியை 5 -4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.1980 ஆம் ஆண்டு தமிழக வீரர் பாஸ்கரன் தலைமையில் தங்கம் வென்ற பின்னர் தற்போது மீண்டும் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.இதனால்,இந்திய ஹாக்கி அணியை பிரதமர் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், 41 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைத்த இந்திய ஹாக்கி அணியில் உள்ள பஞ்சாப்பை சேர்ந்த மன்தீப் சிங் உள்ளிட்ட 8 வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.
Punjab Government announces a cash award of Rs 1 crore each to the India men’s hockey team players from the state
The team won #Bronze medal after they beat Germany in #TokyoOlympics
— ANI (@ANI) August 5, 2021