டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை வென்றுள்ளது இந்திய அணி. இதனால் ஹாக்கி வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது பஞ்சாப் அரசு.
ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா ஜெர்மனியை எதிர்கொண்டது. போட்டியின் இறுதியில் 5:4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.
41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி முதல் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. ஹாக்கி அணி வீரர்களுக்கு இந்திய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், பல்வேறு தரப்பினரும் ஹாக்கி அணியின் வீரர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய ஹாக்கி அணியில் பஞ்சாபை சேர்ந்த 8 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத்சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால்சிங், ஹர்திக்சிங், ஷம்ஷெர்சிங், தில்பிரீத்சிங், குர்ஜந்த்சிங், மன்தீப்சிங் ஆகியோர் ஆவர். இந்நிலையில் இவர்கள் 8 பேருக்கும் தலா ரூ.1 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்குவதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…