பஞ்சாபிலுள்ள அமிர்தசரஸ் எனும் கிராமத்தில் பை ஒன்றில் வெடிகுண்டு டிபன் பாக்ஸ் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸ் எனும் நகருக்கு அருகே உள்ள தலை கிராமத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பஞ்சாப் மாநில காவல் துறை இயக்குநர் ஜெனரல் தின்கர் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், அமிர்தசரஸ் நகருக்கு அருகில் உள்ள தலைக் கிராமத்தில் ஒரு பை கிடந்ததாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதாகவும், பையை திறந்து பார்த்தபோது அதில் வெடிகுண்டுகள் அடங்கிய ஒரு பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அதில் ஐந்து கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கி இருந்ததாகவும், அந்த பாக்ஸில் சுமார் 2 கிலோ வெடிமருந்து இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பை பாகிஸ்தான் எல்லை வான் பகுதியில் பறந்த ட்ரோன்கள் மூலமாக இந்திய பகுதிக்குள் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து ஆராய தேசிய பாதுகாப்புப் படை உதவியை நாடி உள்ளோம் எனவும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். வரவிருக்கும் சுதந்திர தினத்தன்று ஏதேனும் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…