#Hacked:காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக்!
பஞ்சாப் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அரசியல் கட்சிகள்,முதல்வர் அலுவலகம் உள்ளிட்டவைகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குள் ஹேக் செய்யப்படுவது சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில்,இந்திய வானிலை ஆய்வு மையம்,உ.பி முதல்வர் அலுவலகம்,பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆகியவற்றின் ட்விட்டர் கணக்குகள் ஏற்கனவே ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு,பின்னர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில்,பஞ்சாப் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Punjab Congress’ official Twitter handle hacked. pic.twitter.com/wXcNuKjsoQ
— ANI (@ANI) April 11, 2022