புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பஞ்சாப் முதல்வர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான பகவந்த் மான் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்தார். இந்த தகவல் பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மான் பிரதமரை சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாக மான் முன்னதாக ட்வீட் செய்திருந்தார். தேசிய பாதுகாப்பிற்காக பஞ்சாப் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் பகவந்த் மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவருக்கு பிரதமர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தபோது ”பஞ்சாப் மாநில முதல்வராக பதவியேற்றுள்ள பகவந்த் மானுக்கு வாழ்த்துகள். பஞ்சாபின் வளர்ச்சிக்கும், மாநில மக்களின் நலனுக்காகவும் இணைந்து பாடுபடுவோம்” என்று கூறியிருந்தார். இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…