#PunjabAssemblyResults2022:பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ராஜினாமா?..!
பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்,நவ்ஜோத் சிங் சித்து, முன்னாள் முதல்வர்கள் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் எஸ்ஏடி தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களில் அடங்குவர்.
இந்நிலையில்,பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விரைவில் பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.சன்னி இன்று காலை சண்டிகரில் உள்ள ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வந்தடைந்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
பஞ்சாபில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போதே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.சரண்ஜித் சிங் சன்னி அவர் போட்டியிட்ட சம்கவுர் சாஹிப் மற்றும் பதாவுர் ஆகிய இரு தொகுதிகளிலும் பின்தங்கி இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
சன்னி 19,507 வாக்குகள் (43.29 சதவீத வாக்குகளைப்) பெற்றுள்ளார், அதேசமயம் நவ்ஜோத் சிங் சித்து 20,945 வாக்குகள்(46.48 சதவீத வாக்குகளை) பெற்றுள்ளார் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பதவுரில்,முதல்வர் சன்னி,ஆம் ஆத்மி கட்சியின் லப் சிங் உகோக்கை விட பின்தங்கியுள்ளார். சன்னி 5,460 வாக்குகளையும், உகோகே 8,921 வாக்குகளையும் பெற்றுள்ளார்.இந்த நிலையில்,சன்னி தனது ராஜினமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிக்க உள்ளார்.
இதனிடையே,பஞ்சாப்பில் 91 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
,