டும் டும் டும்…பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு இன்று டாக்டருடன் திருமணம்!

Default Image

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்,குர்ப்ரீத் கவுர் என்கிற மருத்துவரை இன்று திருமணம் செய்ய உள்ளார். 

டெல்லியை தொடர்ந்து கடந்த தேர்தலில் யாரும் எதிர்பாரா வண்ணம் பஞ்சாபில் முதன் முதலாக ஆட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி கட்சி. அக்கட்சி சார்பாக பஞ்சாப் முதல்வரானார் பகவந்த் மான்.இவர் சினி உலகில் இருந்து அரசியலில் கால்தடம் பதித்தவர்.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் 2015 இல் தனது முதல் மனைவியைப் பிரிந்தார்.அவருக்கு முதல் திருமணத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில்,தற்போது இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார்.

அதன்படி,இன்று குர்ப்ரீத் கவுர் என்கிற மருத்துவரை திருமணம் செய்ய உள்ளார்.இந்த திருமணத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட சில அரசியல் தலைவர்கள் மற்றும் முதல்வர் பகவந்த் மானின் தாய், சகோதரி,உறவினர்கள் உட்பட குறிப்பிட்ட சில பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்