கைதிகளை விடுவிக்கிறதா?? பஞ்சாப்!தீவிர யோசனையில் அரசு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் 6,000 சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் பல முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருவதால் கட்டுக்குள் உள்ளது. எனினும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தற்போது தீவிரப்படுத்தி வருகின்றன. அதன்எதிரோலியாக க பஞ்சாப் மாநில சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திருட்டு உள்ளிட்ட சின்ன வழக்குகளில் கைதான 2,800 பேர்கள் மற்றும் சிறிய அளவிலான போதைப்பொருட்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 3,000 கைதிகளை விடுவிப்பது குறித்து அம்மாநில பரிசீலித்து வருவதாக சிறைத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.ரந்தவா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.