பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை.. பிரதமர் மோடி வேதனை!
டெல்லி : நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் வேதனை தருகிறது என்று பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் கூறி உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் 31 வயது பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்கம் மட்டுமல்லாது பல்வேறு இடங்களில் பெரும் போராட்டங்கள் நடந்த வரும் நிலையில், இன்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தனத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் நடந்த விழாவில் நாட்டு மக்களுக்கு மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ” இன்று செங்கோட்டையில் இருந்து எனது வலியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்த விரும்புகிறேன். நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் வேதனை தருகிறது. தாய்மார்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நாம் அனைவரும் ஒற்றை சமூகமாக இணைந்து சிந்திக்க வேண்டும்.
இந்தக் குற்றங்கள் அனைத்தும் மக்களை கோபமடைய செய்துள்ளது, அதை என்னால் உணர முடிகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கான தண்டனையை அனைவரும் அறியும் வகையில் செய்ய வேண்டியது காட்டாயம், அது இன்றைய அவசியத் தேவை.
இந்த கொடூரமான செயல்களைச் செய்பவர்களுக்கு விரைவில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்பொழுது தான் சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.”என கொல்கத்தாவின் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.