புல்வாமா: அஞ்சலி செலுத்திய ராணுவ வீரர்கள்.!
- புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு இந்த தாக்குதல் நடந்தது. இதில் உயிரிழந்த வீரர்களின் நினைவகத்தில், இன்று ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு இந்த தாக்குதல் நடந்தது. இதில் உயிரிழந்த வீரர்களின் நினைவகத்தில், இன்று ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் 2,500 சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரில் வேகமாக வந்த தற்கொலை படைத் தீவிரவாதி ஒருவர் நேராக வீரர்கள் பேருந்து மீது மோதி தாக்குதலை நடத்தினார். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
I pay homage to the martyrs of Pulwama attack.
India will forever be grateful of our bravehearts and their families who made supreme sacrifice for the sovereignty and integrity of our motherland.
— Amit Shah (@AmitShah) February 14, 2020
இதனையடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து விசாரணையில், இதன் பின்னணியில் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் இருந்ததும், அதீல் அகமது என்ற தீவிரவாதி இந்த தாக்குதலை நடத்தியதும் தெரியவந்தது. பின்னர் இதற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை பிப்ரவரி 26-ம் தேதி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், புல்வாமா தாக்குதல் குறித்து அமித்ஷா டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் நோக்கில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.