புல்வாமா தாக்குதல்..இந்த நாடே உங்களுக்கு கடன்பட்டுள்ளது- ராகுல் காந்தி டுவீட்..!
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இந்திய பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர்.
पुलवामा हमले में शहीद हुए वीर सैनिकों को श्रद्धांजलि और उनके परिवारों को नमन।
देश आपका ऋणी है।
— Rahul Gandhi (@RahulGandhi) February 14, 2021
இந்த தாக்குதல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை பல தலைவர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் இந்த நாடு உங்களுக்கு கடன்பட்டிருக்கிறது என பத்திவிட்டுள்ளார்.