புல்வாமா தாக்குதல்!! வீரமரணமடைந்த 40-சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி !!மத்திய அரசு அறிவிப்பு

Default Image
  • புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
  • புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40-சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1.01 கோடி நிதி  என்று  மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

Image result for pulwama attack 2019

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியாவின்  மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை  அழித்தது.

இந்நிலையில் தற்போது மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்  புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40-சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1.01 கோடி நிதி கிடைக்கும். ராணுவவீரர்கள் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் அவர்களது குடும்பத்துக்கு தரப்படும்.இதனுடன் பணிக்கான தொகை, காப்பீடு, வீரதீர செயல்களுக்கான நிதி ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ.1.01 கோடி நிதி கிடைக்கும் என்று  மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்