ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் 2,500 சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் ஓன்று வேகமாக வந்த இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதலை நடத்தினார்.
இந்தத்தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைத்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து விசாரணையில், இதன் பின்னணியில் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் இருந்ததும் தெரியவந்தது.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது . புல்வாமா தாக்குதல் நடந்து ஒரு வருடத்திற்கு மேலாக முடிந்த நிலையில், இதுவரை என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை குற்றச்சாற்று எழுந்தது.
இந்நிலையில், இன்று காஷ்மீர் நீதிமன்றத்தில் 13,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்தது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தலைவர் மசூத் அசார், அவரது சகோதரர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிக இராணுவ வாகனங்கள் செல்லும் போது எப்படி பயங்கரவாதிகள் நுழைந்தார்கள்..? அதிகளவில் எப்படி வெடிபொருட்கள் கொண்டு வரப்பட்டது..? என்பது குறித்து இன்னும் புரியதா புதிராக உள்ளது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…