கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை கொண்டு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தற்கொலைப் படையை சேர்ந்த அடில் அகமது தார் இந்த தாக்குதலை நடத்தினார்.
இந்த கோர தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீநகரை சேர்ந்த வைசுல் இஸ்லாம் , புல்வாமாவை சேர்ந்த முஹம்மத் அப்பாஸ் ராதர் என்ற 2 தீவிரவாதிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வைசுல் இஸ்லாம் இந்த தாக்குதலுக்கு வெடிகுண்டு தயாரிக்க வேதிப்பொருட்கள், பேட்டரிகள் மற்றும் பிற பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். இவற்றை ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் கட்டளையின் பேரில் வாங்கியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டதாக என்ஐஏ அதிகாரி ஒருவர்கூறியுள்ளார்.
ஆன்லைன் மூலம் வாங்கிய பொருட்களை வைசுல் இஸ்லாம் நேரடியாக தீவிரவாதிகளிடம் கொடுத்துள்ளார். இதேபோல கைதான முஹம்மத் அப்பாஸ் ராதர் தாக்குதலை நடத்திய அடில் அகமது தார் உள்ளிட்ட 4 தீவிரவாதிகளுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார்.
கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்ட தாரிக் அஹம்மத் ஷா மற்றும் அவரது மகள் இன்ஷா ஜன் அவர்கள் வீட்டிற்கு தீவிரவாதிகளை பத்திரமாக அனுப்பிவைத்ததும் முஹம்மத் அப்பாஸ் ராதர் என்பது விசாரணையில் தெரிந்ததாக என்ஐஏ அதிகாரி ஒருவர் கூறிள்ளார்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…