சிக்கினார் எம்.எல்.ஏ……..ஒராண்டு சிறை வித்த நீதிமன்றம்……பறிக்கபடும் பதவி….பரிதாப எம்.எல்.ஏ…!!

Default Image

என். ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் மீதான சொத்து குவிப்பு வழக்கில், புதுச்சேரி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து, தீர்ப்பளித்துள்ளது.
Related image
என். ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த்துக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் புதுச்சேரி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அசோக் ஆனந்த் இவர் மீதும் அவரது தந்தை ஆனந்தன் மீதும் வருவாய்க்கு அதிகமாக 3 கோடியே 15 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
Image result for எம்.எல்.ஏ அசோக்
இந்த வழக்கு புதுச்சேரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டு நிறுபிக்கப்பட்டதால் தலைமை நீதிபதி தனபால் எம்.எல்ஏ அசோக் அவருடைய தந்தை ஆகிய இருவரும் குற்றவாளிகள் என அறிவித்தார்.இன்று மாலை தண்டனை விவரங்களை வெளியிட்ட தலைமை நீதிபதி எம்.எல்ஏ அசோக் ஆனந்த்துக்கும், அவரது தந்தை ஆனந்தனுக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் அளித்து உத்தரவிட்டார்.
Image result for எம்.எல்.ஏ அசோக்
அபராத தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். தண்டணை வித்தத்து மட்டுமல்லாமல் ஒரு கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிபதி  உத்தரவிட்டார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்