ஜூன் 16-ஆம் தேதி புதுச்சேரி சபாநாயகர் தேர்தல்- முதல்வர் அனுமதி கேட்டு கடிதம் ..!

- ஜூன் 16-ஆம் தேதி புதுச்சேரி சபாநாயகர் தேர்தல் நடத்துவது தொடர்பாக அனுமதி கேட்டு ஆளுநருக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
- புதுச்சேரி சபாநாயகர் பதவிக்கு பாஜக பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ செல்வம் போட்டியிடுகிறார்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணியின் முதல்வராக கடந்த 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார்.
என்ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது. இதனையடுத்து, சபாநாயகர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகளை கேட்டு முதல்வர் ரங்கசாமியை பாஜக வலியுறுத்தி வந்தது. ஆனால் 2 அமைச்சர் பதவிக்கு மேல் தரமுடியாது என்று முதல்வர் தெரிவித்ததால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவியது.
பின்னர் தங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகள் கட்டாயம் வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார்.
இந்நிலையில், ஜூன் 16-ஆம் தேதி புதுச்சேரி சபாநாயகர் தேர்தல் நடத்துவது தொடர்பாக அனுமதி கேட்டு ஆளுநருக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். சபாநாயகர் தேர்தல் நடத்துவதற்கான கோப்புகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முதல்வர் ரங்கசாமி அனுப்பியுள்ளார். புதுச்சேரி சபாநாயகர் பதவிக்கு பாஜக பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ செல்வம் போட்டியிடுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025