பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் – புதுச்சேரி அரசு அறிவிப்பு..!

புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் பொங்கல் பணம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த பரிசு தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு நபர் கொண்ட ரேஷன் அட்டைகளுக்கு ரூ.500 என்றும், இரண்டுக்கு மேற்பட்டோர் உள்ள குடும்பங்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுச்சேரியில் 1,30,791 குடும்பங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு இலவச துணி வழங்கும் திட்டத்தின்கீழ் தொகை வழங்கப்படுகிறது என அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் கூறிஉள்ளார்.
NEW YEAR 2024: ஆங்கில புத்தாண்டுக்கு தலைவர்கள் வாழ்த்து மழை.!
இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்க பணம், இத்துடன் சேர்த்து ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக ஜனவரி 5ம் தேதிக்குள் வெளியாகும் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025