புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று (செப்டம்பர் 30 ஆம் தேதி) தொடங்கி அக்டோபர் 7 ஆம் தேதி நிறைவடைகிறது.
கடந்த 2006-ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன்பின் 15 ஆண்டுகளுக்கு 5 நகராட்சிகள்,10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்.21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனவும்,முதல் முறையாக இத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக காரைக்கால் ,மாஹே,ஏனாம் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்.21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இரண்டாவது கட்டமாக புதுச்சேரி நகராட்சி ,உழவர்கரை பஞ்சாயத்துகளில் அக்.25 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலும், 3-வது கட்டமாக புதுச்சேரியில் உள்ள மற்ற அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் அக்டோபர் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று (செப்டம்பர் 30 ஆம் தேதி) தொடங்கி அக்டோபர் 7 ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11 ஆம் தேதி நிறைவடைகிறது. மூன்றாம்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி நிறைவடைகிறது.
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…