புதுச்சேரியில் இன்று விடுதலை நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று புதுச்சேரி விடுதலை நாளையொட்டி, கடற்கரையில் முதல்வர் ரங்கசாமி கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நீண்ட ஆண்டுகால நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி மாநில அரசு தங்களின் விடுதலை நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது. கடந்த 1673ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் முதன் முதலில் காலூன்றியதும், அதே ஆண்டில் தங்களின் வணிகத்தை துவங்கிய இடம் புதுச்சேரிதான்.
அதன் பிறகு 1721 ம் ஆண்டு மாஹி, ஏனாம், காரைக்கால், சந்திரனாகூரையும் அடுத்தடுத்து தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். இந்தியா முழுவதும் பல்வேறு விடுதலைபோராட்டங்கள் எழுந்த நிலையில், 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு மட்டும் சுதந்திரம் அளித்தனர். ஆனால், புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அப்போது, பிரெஞ்சுக்காரர்கள் வெளியேற வேண்டும் என்று புதுச்சேரியிலும் போராட்டம் வெடித்தது. அதன் காரணமாக புதுச்சேரிக்குகும் பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து விடுதலை கிடைத்தது. 180 ஆண்டுகளுக்கு பின் வாக்கெடுப்பு மூலம் புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்ததாக கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் பிரதமரின் பிரதிநிதியாக செயல்படுகிறார் – அமைச்சர் பொன்முடி
பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து புதுச்சேரிக்கு 1954-ஆம் ஆண்டு விடுதலை கிடைத்தது. இதனிடையே, புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்ததால் இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதிக்கு மறுநாள் 16-ம் தேதியை புதுச்சேரியின் சுதந்திர தினமாக புதுச்சேரி அரசு கொண்டாடி வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாட அறிவிக்க வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்தினர்.
அதனால் நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி மாநில அரசு தங்களின் விடுதலை நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது. அந்தவகையில், புதுச்சேரி விடுதலை தின கொண்டாட்டம் மற்றும் கல்லறை திருவிழா ஆகிய நிகழ்வுகளை முன்னிட்டு இன்றும், நாளையும் அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை.. வரும் ஞாயிற்று கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்.! அரசு அறிவிப்பு.!
எனவே, இன்று விடுதலை நாளையொட்டி, புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியேற்றி வைத்தார். காவல்துறையினர், படைப்பிரிவின் மற்றும் பள்ளி மாணவ – மாணவிகள் அணிவகுப்பு நடத்தினர். இதன்பின் இவ்விழாவில் பேசிய அவர், பரப்பளவில் சிறிய மாநிலம் என்றாலும் பெரிய மாநிலங்களுக்கு இணையாக புதுச்சேரி வளர்ந்துள்ளது. புதுச்சேரியில் தனிநபர் வருமானம் ரூ.2,22,451 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி துறைமுகம் – சென்னை துறைமுகம் இடையே சரக்குகளை கையாளும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றார். மேலும், புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை, ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…