புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கட்டணம் என்ற அறிவிப்பு நிறுத்திவைப்பு!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைகளுக்கு கட்டண முறை நிறுத்திவைப்பு என நிர்வாகம் அறிவிப்பு.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குறிப்பிட்ட வகை நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கட்டணம் என்ற அறிவிப்பு நிறுத்தி வைப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் வராதோர் மற்றும் சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைகளுக்கு கட்டணம் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்து போராட்டங்கள் நடைபெற்றது.
கட்டணம் என்ற அறிவிப்புக்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைகளுக்கு கட்டண முறை நிறுத்தி வைப்பதாக ஜிப்மர் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.