இரவல் ஆளுனர் வேண்டாம் என பதாகையை ஏந்தி, புதுச்சேரி சுயேட்சை எம்எல்ஏ சட்டப்பேரவையில் ஆளுநர் தமிழிசைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராக பதவியில் இருந்து வருகிறார். அதே போல, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
சுயேச்சை எம்எல்ஏ :
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று சட்ட பேரவையில் சுயேட்சை எம்எல்ஏ ஒருவர் பதாகைகளை சுமந்து வந்துள்ளார். மார்ச் மாதம் 13ஆம் தேதி புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி இன்று ஆளுநர் தமிழிசை உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது.
தமிழிசைக்கு எதிர்ப்பு :
இதில், தமிழிசை சவுந்தரஜன் பேசும் போது, முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு என்பவர் கையில் ஒரு பதாகையை ஏந்தினார். அதில், மத்திய அரசே எங்களுக்கு (புதுச்சேரிக்கு) நிரந்தர ஆளுநர் வேண்டும். இரவல் ஆளுநர் வேண்டாம் என எழுதப்பட்டு இருந்தது.
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…