புதுச்சேரி: மீனவர்களுக்கான ஈமச்சடங்கு தொகை உயர்வு – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் மீனவர்களின் ஈமச்சடங்குக்கான உதவித்தொகை ரூ.15,000 ஆக உயர்த்தி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2023-24-ஆம் ஆண்டிற்கான ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை கடந்த இரு தினங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். அப்போது, பல்வேறு முக்கிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்களை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டிருந்தார்.
இதிலிருந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரியில் மீனவர்களின் ஈமச்சடங்குக்கான உதவித்தொகை ரூ.15,000 ஆக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி உதவித்தொகை அதிகரிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஏற்கனவே, பட்டியலினத்தவருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என்றும் பெண் குழந்தை பிறந்தால் வங்கியில் 18 ஆண்டுகளுக்கு ரூ.50 ஆயிரம் நிரந்தர வைப்பு நிதியாக தேசிய வங்கியில் செலுத்தப்படும் எனவும் பல்வேறு முக்கிய அறிவிப்பிப்புகளை பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்காசாமி அறிவித்திருந்தார்.