ஊரடங்கு தளர்வு : நாளை முதல் 100% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி – புதுச்சேரி அரசு!

Default Image

புதுச்சேரியில் நாளை 100% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவலை குறைக்கும் விதமாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்பொழுது கொரோனா பரவல் குறைத்துள்ளதை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் வரும் நவம்பர் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் புதுச்சேரியில் இரவு நேரம் கடைகள் திறப்பதற்கான கால அவகாசம் 10 மணியிலிருந்து 11 மணியாக  நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி முழுவதும் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கலாம் எனவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்வுகளை நடத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk
AIADMK bjp
goat vijay gbu ajith