நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை! பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம் வழங்கும் ஆதி திராவிடர் நலத்துறை
Puducherry: புதுச்சேரி சிறுமியின் குடும்பத்திற்கு, ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூ.7 லட்சம் வழங்கப்பட உள்ளது. புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி ஒருவர் கால்வாயில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது தமிழகம், புதுச்சேரி தாண்டி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Read More – ஆந்திர அரசியல் அதிரடி.! சந்திரபாபு நாயுடு – பவன் கல்யாண் – பாஜக மெகா கூட்டணி.!
இந்த சம்பவம் தொடர்பாக கருணாஸ் (வயது 19), விவேகானந்தன் (வயது 57) ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில் இருவரும் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொடூரமாக கொன்று சாக்கடை கால்வாயில் வீசியது தெரியவந்தது. கைதான இருவரும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சிறுமியின் பெற்றோருக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார். இந்த நிலையில் புதுச்சேரி சிறுமியின் குடும்பத்திற்கு, ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூ.7 லட்சம் வழங்கப்பட உள்ளது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய சென்னை பிரிவின் மண்டல இயக்குநர் ரவி வர்மா இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
Read More – ஒடிசாவில் ஒத்துவராத தொகுதி பங்கீடு.? தனித்து போட்டியிடும் பாஜக.!
அவர் கூறுகையில், “சிறுமி படுகொலை தொடர்பாக தாமாக முன்வந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணையை தொடங்கியது, ஜிப்மர் மருத்துவமனை, முத்தியால்பேட்டை காவல் நிலையம், சிறுமியின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடைபெற்றது.
Read More – குண்டுவெடிப்பு சம்பவம்… பலத்த பாதுகாப்புடன் இன்று மீண்டும் திறந்த ராமேஸ்வரம் கஃபே!
சிறுமியின் குடும்பத்திற்கு திங்கட்கிழமை அன்று, ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூ.7 லட்சம் வழங்கப்படும், புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.