புத்தகப் பை, பொம்மையுடன் சிறுமியின் இறுதி ஊர்வலம்.! கண்ணீர் மல்க வழியனுப்பிய பொதுமக்கள்.!
Puducherry : புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் ஊர்வலகமாக எடுத்து சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
புதுச்சேரியில் சோலை நகரில் காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் இரண்டு பேரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும், 5 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து, ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Read More – சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம்…அதிரடி உத்தரவு பிறப்பித்த புதுச்சேரி முதல்வர்.!
அதுமட்டுமில்லாமல், ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்ட நிலையில், விசாரணை தொடங்கப்பட்டது. இதனிடையே, சிறுமி கொலைக்கு நீதி வழங்க கோரி புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றது.
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ரங்கசாமி மற்றும் காவல்துறை உறுதி அளித்ததை அடுத்து, ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட சிறுமியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
Read More – காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்தும்… பிரதமரின் முதல் பயணமும்…
இதையடுத்து, படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் இன்று காலை பாப்பம்மாள் கோவில் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் இறுதி ஊர்வலம் வீதிவழியே நடைபெற்றது. இறுதி ஊர்வல வாகனத்தில் சிறுமியின் புத்தகங்கள், பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.
Read More – புதுச்சேரியில் படுகொலை: சிறுமியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்!
இறுதி ஊர்வலகத்தில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான பங்கேற்ற நிலையில், சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சிறுமியின் உடல் ஊர்வலகமாக எடுத்து செல்லப்பட்டு வைத்திக்குப்பம் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சிறுமி ஆசையுடன் பயன்படுத்திய உடை, பொம்மைகள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்து கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது.