புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் 85 லட்சம் நிதி முறைகேடு…!முதல்வர் நாராயணசாமி தகவல்

Default Image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் 85 லட்சம் நிதி முறைகேடு செய்து  உள்ளது என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

அதேபோல் புதுச்சேரியில் அரசு சார்பில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அரசு விழா நடத்தப்பட்டது.அப்போது அந்த விழாவில் அமைச்சர்கள் , அரசு அதிகாரிகள் ,புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் பங்கேற்றார்.அப்போது விழா மேடையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பேசியபோது இந்த அரசு குறித்து பல்வேறு குற்றசாட்டுக்களை முன் வைத்தார் பேசினார் அப்போது மைக்_கை அணைத்ததாக தெரிகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக MLA அன்பழகன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இருவருக்கும் வாக்குவாதம் முற்ற ஒரு கட்டத்தில் ஆளுநரை ‘ யு கோ ‘ என்று சொல்லி விட்டு மேடையை விட்டு இறங்கினார்.இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
Related image

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பரபரப்பு தகவலை அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.அவர் கூறுகையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக உள்ளது.அதேபோல் ஆளுநர் அலுவலகம் சமூக பொறுப்புணர்வு நிதியை முறைகேடாக செலவு செய்துள்ளது.அதாவது 85 லட்சம் நிதி முறைகேடு என்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்