புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தேசிய கொடியை ஏற்றிவைத்தார்
புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தேசிய கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.இந்த விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரையில், புதுச்சேரியில் கஜா புயலின்போது அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது.அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணக்கமான உறவே, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்றும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.