Puducherry – புதுச்சேரியில், கடந்த 2ஆம் தேதி காணாமல் போன 9 வயது சிறுமி , 4 நாட்கள் கழித்து சிறுமியின் வீட்டருகே ஒரு கால்வாயில் கைகால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம், புதுச்சேரி முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது .
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள், கள விசாரணை அடிப்படையில் கருணாஸ் எனும் 19வது வாலிபனையும், விவேகானந்தன் எனும் 52 வயது நபரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்து புதுச்சேரி முழுவதுவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
புதுச்சேரி முழுவதும் , சிறுமி கொலையில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் அதிகரிக்கும் போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிமுக, திமுக, காங்கிரஸ் என பல்வேறு கட்சியினர், பொது மக்கள், மாணவர் அமைப்புகள் , தொழிற்சங்கங்கள் என பலரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இன்று காலை 6 மணி முதலே முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி போராட்டதிற்கு பேருந்து ஓட்டுநர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், அங்கு பெரும்பாலான அரசு , தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. மாநில எல்லையிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் இருந்து புதுச்சேரி வழியாக செல்லும் பேருந்துகளும் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.
முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் தேர்வுகளை எழுத செல்லலாம் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் நல்லடக்கம் நேற்று திரளான மக்கள் கண்ணீரின் மத்தியில் நடைபெற்றது. குற்றவாளிகள் இருவருக்கும் 15நாள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமி காணாமல் போன வழக்கை விசாரிக்க கால தாமதம் ஆனதால், முத்தியால்பேட்டை காவல்நிலைய அதிகாரிகள் அனைவரும் வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…