புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்.! அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி.!

Puducherry Bundh

Puducherry – புதுச்சேரியில், கடந்த 2ஆம் தேதி காணாமல் போன 9 வயது சிறுமி , 4 நாட்கள் கழித்து சிறுமியின் வீட்டருகே ஒரு கால்வாயில் கைகால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம், புதுச்சேரி முழுவதும்  பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது .

Read More – மகளிர் தினத்தன்று பிரதமர் கொடுத்த அறிவிப்பு… சமையல் சிலிண்டர் விலை அதிரடி குறைவு!

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள், கள விசாரணை அடிப்படையில் கருணாஸ் எனும் 19வது வாலிபனையும், விவேகானந்தன் எனும் 52 வயது நபரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்து புதுச்சேரி முழுவதுவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

Read More – எங்களுக்கு இப்படிப்பட்ட அரசு தான் வேணும்… கோரிக்கை வைத்த முதல்வர்.!

புதுச்சேரி முழுவதும் , சிறுமி கொலையில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் அதிகரிக்கும் போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று அதிமுக, திமுக, காங்கிரஸ் என பல்வேறு கட்சியினர், பொது மக்கள், மாணவர் அமைப்புகள் , தொழிற்சங்கங்கள் என பலரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இன்று காலை 6 மணி முதலே முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Read More – சமையல் எரிவாயு மானிய திட்டம் நீட்டிப்பு..! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு

புதுச்சேரி போராட்டதிற்கு பேருந்து ஓட்டுநர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், அங்கு பெரும்பாலான அரசு , தனியார் பேருந்துகள் இயங்கவில்லை.  மாநில எல்லையிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் இருந்து புதுச்சேரி வழியாக செல்லும் பேருந்துகளும் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.

முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் தேர்வுகளை எழுத செல்லலாம் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் நல்லடக்கம் நேற்று திரளான மக்கள் கண்ணீரின் மத்தியில் நடைபெற்றது. குற்றவாளிகள் இருவருக்கும் 15நாள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமி காணாமல் போன வழக்கை விசாரிக்க கால தாமதம் ஆனதால், முத்தியால்பேட்டை காவல்நிலைய அதிகாரிகள் அனைவரும் வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்