வரும் 20-ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி…!
ஆகஸ்ட் 20-ஆம் தேதி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றும உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும், புதிய சட்டப்பேரவை கட்டடத்திற்கு அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில், சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி அவர்கள் டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் செப்டம்பர் மாதம் வரையிலான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.330 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றும், புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் குறித்த தேதி அதன்பின் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.