50 நாட்களுக்குப் பிறகு,புதுச்சேரி அமைச்சரவைக்கான பெயர் பட்டியலை,அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள்,துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் இன்று கொடுத்துள்ளார்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணியின் முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்.
பின்னர்,என்ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது. இதனையடுத்து, பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.
பின்னர்,புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் பதவியேற்றுக்கொண்டார்.முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து,கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக அமைச்சரவைக்கான பெயர் பட்டியலில் ஜான்குமார் அவர்களின் பெயர் இடம்பெறாதால்,அவரின் ஆதரவாளர்கள் புதுச்சேரியில் உள்ள பாஜக அலுவலகத்தை சூறையாடினர்.இதனால்,அமைச்சர்கள் பதவியேற்பு தள்ளிப்போனது.
இந்நிலையில்,50 நாட்களுக்குப் பிறகு,புதுச்சேரி அமைச்சரவைக்கான பெயர் பட்டியலை,அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள்,துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் இன்று கொடுத்துள்ளார்.
இதனையடுத்து,அமைச்சரவைக்கான பெயர் பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள்,மத்திய உள்துறை அனுமதிக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவார்.அதனைத் தொடர்ந்து,வரும் 27-ம் தேதி அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…