சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம்…அதிரடி உத்தரவு பிறப்பித்த புதுச்சேரி முதல்வர்.!
Puducherry: புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. காணாமல் போன 9 வயது சிறுமி, கால்வாயில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
READ MORE – பாலியல் வன்கொடுமையால் கொலை…சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்.!
தற்போது, இந்த கொலை வழக்கில், ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று உத்தரவிட்ட நிலையில், அந்த சிறப்பு குழு விசாரணையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, குற்றவாளிகள் 2 பேர், சந்தேகத்தின் பேரில் விசாரணையில் உள்ள 5 பேரின் ரத்த மாதிரி, ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
READ MORE – புதுச்சேரியில் படுகொலை: சிறுமியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்!
முன்னதாக, காணாமல் போன சிறுமியின் பெற்றோர் கடந்த சனிக்கிழமை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பத்தில் காலம் தாழ்த்தியதால், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
Read More – காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!
பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் இன்று காலை 10 மணிக்கு பாப்பம்மாள் கோவில் சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுமி உடல் இன்று அடக்கம் செய்யப்படும் நிலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.