நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…!புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் , தமிழகத்தில் இந்தாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும்.மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 45 நாட்களுக்கு மழை, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.மேலும் ரெட் அலர்ட் பாதிப்பு ஏதும் இல்லை.கனமழை மட்டும் பெய்ய வாய்ப்பு உள்ளது.காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ஆனால் புதுச்சேரியில் மழை சற்று அதிகமாக பெய்து வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.