துணை நிலை ஆளுநர் அரசு அலுவலகங்களுக்கு செல்வதற்கு விதிமுறையில் இடமில்லை …! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
துணை நிலை ஆளுநர் அரசு அலுவலகங்களுக்கு செல்வதற்கு விதிமுறையில் இடமில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஆளுநர் மாளிகையை தேர்வு மையமாக மாற்றியுள்ளார். துணைநிலை ஆளுநர் அரசு அலுவலகங்களுக்கு சென்று, ஆய்வு நடத்த விதிமுறைகளில் இடமில்லை, விதிகளை மீறி அவர் அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்து வருகிறார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.