நீதிமன்ற உத்தரவுப்படி ஆளுநர் கிரண்பேடி செயல்படவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி இடையே அதிகாரப்போட்டி அதிகரித்து வந்தது.இதன்விளைவாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண் பேடி தலையிடக்கூடாது என்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017ல் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அனுமதி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.மேலும் இது தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் மோதல் குறைந்த பாடில்லை.
இந்த நிலையில் கிரண்பேடி குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நீதிமன்ற உத்தரவுப்படி ஆளுநர் கிரண்பேடி செயல்படவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன்.மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு ஆளுநர் இடையூறு செய்யக்கூடாது என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…