புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்பு
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் நேற்று முதல்வர் நாராயணசாமி பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அளித்திருந்தார். ஆளுநர் இதை ஏற்றதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். மேலும் புதுச்சேரி அமைச்சரவையின் ராஜினாமாவையும் குடியரசு தலைவர் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.