புதுச்சேரி பட்ஜெட் – அதிமுக வரவேற்பு!

Default Image

மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கி பட்ஜெட்டில் அறிவிப்புகள் என அதிமுக வரவேற்பு.

புதுச்சேரி பட்ஜெட்:

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2023-24-ஆம் ஆண்டிற்கான ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி சட்டப்பேரவையில் மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு ம்முக்கிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டிருந்தார்.

பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்:

இதில் குறிப்பாக, புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும். பெண் குழந்தை பிறந்தால் வங்கியில் 18 ஆண்டுகளுக்கு ரூ.50 ஆயிரம் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும் என்றும் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரை சிபிஎஸ்இ பாடத்திட்டமாக மாற்றப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

மேலும், 11, 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விரைவில் வழங்கப்படும் என்றும் மீனவர் உதவித்தொகை ரூ.3,000 லிருந்து ரூ.3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார். இதுபோன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, நிதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதிமுக வரவேற்பு:

இருப்பினும், புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள முழு பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்க்கக் கூடிய எந்த திட்டமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் குற்றசாட்டியிருந்தார். இந்த நிலையில், புதுச்சேரியில் அனைத்து தரப்பு மக்களின் நலனையும் பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது என்று அதிமுக வரவேற்பு அளித்துள்ளது. மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதிமுக அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்