புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடக்காது – நமச்சிவாயம்

- குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடைஅடைப்பு போராட்டம் நடைபெறாது
- மாநில தலைவர் நமச்சிவாயம் தகவல்
குடியுரிமை சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்பாட்டங்களையும்,போராட்டங்களையும் , பேரணிகளையும் நடத்தி வந்த நிலையில் புதுச்சேரியில் மாநிலத்தில் டிசம்பர் 27 குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.இந்நிலையில் டிச.,27ல் நடத்தவிருந்த முழு அடைப்பு போராட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தெரிவிக்கையில் டிச.,27ல் நடத்தவிருந்த முழு அடைப்பு போராட்டம் ஆனது வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025